உலகம்
அமெரிக்காவுக்கு, இந்தியா வழங்கிய அதிரடி பதில்

Aug 5, 2025 - 12:54 PM -

0

அமெரிக்காவுக்கு, இந்தியா வழங்கிய அதிரடி பதில்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு அதிக வரிகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் நியாயமற்றது என இந்தியா அறிவித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய தீர்மானங்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே, இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதனை தெரிவித்துள்ளார். 

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளக்கூடும் எனத் தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். 

இந்தியா இப்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போகிறது என எனக்கு தெரியவந்துள்ளது. 

ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. இது ஒரு நல்ல நடவடிக்கை. இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம் எனவும் அவர் கூறியிருந்தார். 

ஓகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு செல்லும் ஒவ்வொரு இந்திய பொருளுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் கடந்த வாரம் ட்ரம்ப் அறிவித்திருந்தார். 

இந்தியா ரஷ்யாவிலிருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்த வரிக்கு மேல், கூடுதல் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். 

இந்தியா எண்ணெய் வாங்குவது உக்ரைன் போரைத் தொடர ரஷ்யாவுக்கு உதவியாக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குற்றம்சாட்டுகிறார். 

இதற்கு பதில் வழங்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வௌியிட்டுள்ள அறிக்கையில், மோதலின் தொடக்கத்தில் ரஷ்யாவின் எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியாவை, அமெரிக்கா ஊக்குவித்ததாகக் கூறினார். 

"மோதல் வெடித்த பிறகு பாரம்பரிய பொருட்கள் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால், இந்தியா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது". 

அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போலவே, இந்தியாவும் அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும், பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05