Aug 5, 2025 - 01:25 PM -
0
இந்திய பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமானது.
கூட்டத்தொடர் ஆரம்பமான முதல் பஹல்காம் தாக்குதல், ஒப்பரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை சபை அமர்வுகளில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, பாராளுமன்றத்தில் ஒப்பரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனால், இன்று முற்பகல் 11 மணியளவில் இரண்டு அவைகளிலும் ஆளும் மற்றும் எதிர் தரப்பினருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.