வடக்கு
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

Aug 5, 2025 - 02:52 PM -

0

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்று (04) மாலை 6 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

 

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் ஓர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

 

இதன்போது ஆழியவளை களப்பு பகுதியில் 30 பொதிகள் அடங்கிய 102 கிலோ 350 கிராம் நிறையுடைய, 23 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

 

இச்சம்பவத்தடன் தொடர்புடைய எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.

 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05