Aug 5, 2025 - 03:22 PM -
0
சர்வதேச ஒருநாள் தொடருக்கும், இந்திய அணியின் தலைவராக சுப்மன் கில்லை தெரிவு செய்யலாம் என அந்த அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் அணியின் தெரிவுக்குழு பரிசீலனை செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர், ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாட தயாராக உள்ளனர்.
ஆனால், அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விடயங்கள் தெரிவுக் குழுவை பொறுத்தது.
அவுஸ்திரேலியா அல்லது மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தெரிவுக்குழு விரும்பினால் சுப்மன் கில்லை தலைவராக தெரிவு செய்யலாம். இதுவே சரியான நேரமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார். 2-வது டெஸ்டில் அவர் பெற்றுக்கொண்ட 269 ஓட்டங்கள் மிகவும் சிறப்பானது.
இந்த தொடரை சுப்மன் கில் உரிய வகையில் கையாண்டு, அணியையும் சிறப்பாக வழி நடத்தியுள்ளதாக சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.