Aug 5, 2025 - 04:56 PM -
0
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீடிப்பதற்கு இந்திய மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ஆட்சி அமுல்ப்படுத்தப்பட்டது.
இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2 ஆம் திகதி அனுமதி வழங்கியது. அதற்கமைய வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதற்கிடையே, மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீடிக்க இந்திய மத்திய அரசு யோசனையை முன்வைத்தது.
இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீடிப்பதற்கு மாநிலங்களவையில் பிரேரனை கொண்டு வரப்பட்டது.
குறித்த பிரேரனைக்கு மாநிலங்களவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளதோடு, நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.