இந்தியா
உத்தரகாண்டில் வௌ்ளம்- நால்வர் பலி

Aug 5, 2025 - 07:32 PM -

0

உத்தரகாண்டில் வௌ்ளம்-  நால்வர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட வௌ்ள பெருக்கில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். 

அங்கு தொடரும் மழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும், மண்ணில் பலர் புதையுண்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. 

வௌ்ளத்தில் கிராமம் ஒன்றே மூழ்கியுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, 

வெள்ளத்தில் சேறும் கலந்து வந்ததால், மலை அடிவாரத்தில் இருக்கும் தாராலி கிராமம் முழுவதுமாகவே மண்ணில் புதையுண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

காயமடைந்தவர்களுக்கு ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது அங்கு மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05