Aug 6, 2025 - 08:01 AM -
0
தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
"மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட பெரியது எதுவும் இல்லை. அது எங்களிடம் இருக்கும் வரை, எந்தவொரு சலுகையையும் நீக்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை." என்றார்
கேள்வி - இது நடந்தால், நீங்கள் விஜேராமவை விட்டு வெளியேறி மெதமுலனவுக்குச் செல்ல வேண்டுமா?
பதில் - "மெதமுலன விஜேராமவை விட மிகச் சிறந்தது."
கேள்வி - உங்கள் கருத்துப்படி, அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற செயலைச் செய்கிறது?
"பழிவாங்க..." என்றார்.