Header Logo

வடக்கு
மன்னார் நகரை வந்தடைந்த காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

Aug 6, 2025 - 10:17 AM -

0

மன்னார் நகரை வந்தடைந்த காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட பாரிய வாகனங்கள் இன்று (06) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது.

குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 03 ஆம் திகதி இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (04) மற்றும் நேற்று (05) ஆகிய தினங்களில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் காலை மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் மற்றும் மன்னார் நகருக்குள் கொண்டு வரப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களை கொண்டு வர வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 5 இற்கும் மேற்பட்ட காற்றாலை மின் கோரங்களுக்கான காற்றாலைகளை மன்னார் நகருக்குள் எடுத்து வர வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து மன்னார் தள்ளாடி பகுதியில் நேற்று இரவு மக்கள் கண்காணிப்பு போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

குறித்த பகுதியில் நின்ற மக்கள் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரங்களை ஏற்றிய வாகனம் மன்னாரை நோக்கிச் சென்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்ற நிலையில் சிறிய அளவிலான மக்களே குறித்த பகுதியில் நின்ற நிலையில் பொலிஸார் அவ்விடத்தில் நின்றவர்களை அச்சுறுத்தி பலத்த பாதுகாப்புடன் மன்னாரை நோக்கி குறித்த வாகனம் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title