Aug 8, 2025 - 11:52 AM -
0
நடிகர் தனுஷ் தற்போது இயக்கி, நடித்துள்ள படம்தான் 'இட்லி கடை'.
இந்தப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன்,அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'டான் பிக்சர்ஸ், வொண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இதை தயாரிக்கின்றன.
குறித்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார்.
இப்படம் வரும் ஒக்டோபர் 1ஆம் திகதியன்று திரைக்கு வருகிறது.
சமீபத்தில் படத்திலிருந்து வெளியான 'என்ன சுகம்' பாடல் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி சென்னையில் உள்ள நேரு உள்ளக விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.