Header Logo
Mogo Academy

சினிமா
28 ஆண்டுகளுக்கு பின், நடிக்க வரும் டிஸ்கோ சாந்தி

Aug 8, 2025 - 04:27 PM -

0

28 ஆண்டுகளுக்கு பின், நடிக்க வரும் டிஸ்கோ சாந்தி
Mobitel inner

1983ஆம் ஆண்டு வெளியான வசந்தமே வருக படத்தின் மூலம் நடிகை சாந்த குமாரி அறிமுகமானார். டிஸ்கோ சாந்தி என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட இவர் 1985ஆம் ஆண்டு வெளியான 'உதய கீதம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 

பின்னர், 80 மற்றும் 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாகவும், கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்தார். 

இவரது நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். சில காரணங்களால் 1997ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து டிஸ்கோ சாந்தி ஒதுங்கினார். 

இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பின்னர் டிஸ்கோ சாந்தி தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். 

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லோரன்ஸ், தனது சகோதரர் எல்வினுடன் 'புல்லட்' படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

28 ஆண்டுகளுக்கு பிறகு, டிஸ்கோ சாந்தி மீண்டும் நடிக்க வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

படத்தில் அவர் ஒரு சூனியக்காரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

விரைவில் திரைக்கு வரவிருக்கும் புல்லட் படத்தில் டீசரை எஸ்.ஜே,சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara