Aug 9, 2025 - 04:01 PM -
0
இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதலில் பாலஸ்த்தீனிய முன்னாள் கால்பந்தாட்ட தேசிய வீரரான சுலைமான் அல் ஒபேய்ட் (Suleiman al-Obeid) கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தமது குடும்பத்தினருக்கான உணவு உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது, இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலால் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் தொடர்ந்தும் காசாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதேநேரம், அங்குள்ள மக்களுக்கு போதியளவான நிவாரண உதவிகள் கிடைக்காமை காரணமாக அவர்கள் வெகு நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பாலஸ்த்தீனிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையின் படி, இஸ்ரேலிய தாக்குதல்களால் இதுவரை 321 பாலஸ்த்தீனிய கால்பந்தாட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.