Aug 10, 2025 - 09:25 AM -
0
புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (10) ஆரம்பமானது. இதன்படி, நாடளாவிய ரீதியில் மூன்று இலட்சத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து 51 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அந்தவகையில், மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களும் இம்முறை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.
--