Aug 10, 2025 - 09:58 AM -
0
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையானது இன்று (10) நாடளாவிய ரீதியில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.
அந்த வகையில், யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் வட்டு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை ஆரம்பமாகியது.
இதன்போது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொள்வதை அவதானிக்க முடிந்தது.
தரவுகளுக்காக வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அழைப்பு மேற்கொண்டவேளை அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.
--