Aug 10, 2025 - 10:11 AM -
0
காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேலில் ஆர்ப்பாட்டம் இடம்பபெறுகின்றது.
இஸ்ரேலிய பிரதமரின் இந்த தீர்மானத்தால், ஹமாஸின் தடுப்பில் உள்ள பணயக் கைதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் பெரும் அழிவையும் விளைவிக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.
ஆயிரக் கணக்கான மக்களும், முன்னாள் இராணுவ அதிகாரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
ஹைஃபா மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, துருக்கி, ஜெர்மனி, பின்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளும் தமது கண்டனத்தை வௌியிட்டுள்ளன.