Aug 10, 2025 - 10:30 AM -
0
இன்று (10) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து வாளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலியகோவில் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் வாளினை கையில் வைத்திருந்தவேளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--