Aug 10, 2025 - 10:43 AM -
0
ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும், உக்ரைனும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக மீண்டும் கருத்து வௌியிட்டுள்ளன.
"உக்ரைனில் அமைதிக்கான பாதையை உக்ரைன் இல்லாமல் தீர்மானிக்க முடியாது என்று பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைன், அதன் சொந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்படாது வருத்தமளிப்பதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிவ் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் "இறந்த முடிவுகளுக்கு" சமமாகவே கருதப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.