Aug 10, 2025 - 12:36 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,667 மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 24 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.
2,787 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்திருந்தார்.
அத்தோடு பரீட்சை நிலைய வளாகத்திற்குள் பரீட்சார்த்திகள், பரீட்சை பணிக்குழுவினர் தவிர்ந்த வேறு எவருக்கும் அனுமதி இல்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தேவையான எழுதுகருவிகள் தவிர்ந்து ஏனைய பொருள்களை எடுத்து செல்வதை தவிர்க்குமாறும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் முல்லைத்தீவு கல்வி வலயங்களை சேர்த்து மாவட்டத்தின் 1,667 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற 24 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்தில் 03 இணைப்பு நிலையங்களும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 06 இணைப்பு நிலையங்களுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 09 இணைப்பு நிலையங்களும், துணுக்காய் கல்வி வலயத்தில் 08 பரீட்சை நிலையங்களும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 16 இணைப்பு நிலையங்களுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 24 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்ற நிலையில் துணுக்காய் கல்வி வலயத்தில் 476 பரீட்சாத்திகளும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 1191 பரீட்சாத்திகளுமாக 1,667 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் மதவழிபாடுகளில் ஈடுபட்டு ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதை அவதானிக்க முடிந்தது.
--