Aug 10, 2025 - 12:58 PM -
0
நடப்பு ஆண்டின் 8 ஆம் மாதமான ஆகஸ்ட் மாதத்தின் 2 ஆம் வாரம், நியூமராலஜி எண்கள் பலவற்றுக்கும் தொழில் வாழ்க்கையில் ஏற்றத்தை கொண்டு வருகிறது. ஒரு சில எண்களுக்கு பல நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும். புதிய வாய்ப்புகளை கொண்டு வரும், எண் 9 இன் ஆதிக்கம் நிறைந்து காணப்படும் இந்த வாரம் 1 முதல் 9 வரை உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்துவமான பலன்களை அளிக்க இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நடப்பு ஆண்டில் அரிய கிரக நிலை மாற்றங்கள் பல நிகழும் ஒரு மாதமாக ஆகஸ்ட் மாதம் பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் அடிப்படையில் மாற்றத்திற்கான ஒரு மாதமாக பார்க்கப்படும் நிலையில், இந்த மாதத்தின் 2 ஆவது வாரத்தில் எண் கணித பலன்கள் நம் அனைவருக்கும் என்ன மாதிரியான பலன்களை அளிக்கிறது? குறிப்பாக தொழில் வாழ்க்கையில் எந்த மாதிரியான பலனை அளிக்கிறது? சாதனைகள் செய்ய உதவி செய்யுமா? இல்லையா? என்பது குறித்து சற்று விரிவாக நாம் காணலாம்.
எண் 1
நியூமராலஜி எண் 1 கொண்டவர்கள் இந்த வாரம் கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகள், உங்கள் பணிகளை தவறு என குற்றம் சுமத்தாம், உடன் பணிபுரியும் நபர்கள் உங்கள் முன்னேற்றத்தை சிதைக்கும் வகையில் சில சதி திட்டங்களை தீட்டலாம்.
பணியிடத்தில் காணப்படும் இந்த அரசியல், உங்களை மனதளவில் காயப்படுத்தலாம், எதிர்காலம் குறித்த சிந்தனைகளை அதிகரிக்கலாம். மன அழுத்தம், அலைச்சல் நிறைந்த ஒரு காலமாக இந்த வாரம் அமையும்.
எண் 2
நியூமராலஜி எண் 2 கொண்டவர்கள் இந்த வாரம் கலவையான பலன்களை பெறுவார்கள். வரவுக்கு இணையாக செலவுகள் காணப்படும், குடும்ப உறவுகள் மத்தியில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், இருப்பினும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத வகையில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் நிறந்திருக்கும்.
பணியிடத்தில் அலைச்சல் நிறைந்து காணப்படும், உங்கள் பணிகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கும். அதாவது, உங்கள் கடின உழைப்பும், நிதானமும் இந்த வாரம் உங்களை காப்பாற்றும்.
எண் 3
நியூமராலஜி எண் 3 கொண்டவர்கள் இந்த வாரம் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி வைப்பது நல்லது. குறிப்பாக குடும்ப உறவுகளிடம் கோவத்தை வெளிப்படுத்தாது, கனிவாக நடந்துக்கொள்வது. அதேப்போன்று, பணியிடத்தில் சக ஊழியர்களுடனும், தொழில் வாழ்க்கையில் கூட்டாளருடன் கோபத்தை வெளிப்படுத்தாது கனிவாக நடந்துக்கொள்வது அவசியம். இந்த வாரம் உங்கள் கோபம், நிதி இழப்புக்கு வழிவகுக்கும். எண்ணற்ற பிரச்சனைகளையும் உடன் கொண்டு வரும். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
எண் 4
குடும்ப செலவுகள் அதிகரிக்கும் ஒரு வாரமாக இந்த வாரம் அமையும். வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் செலவுகளை அதிகரிக்கும், உங்கள் வங்கி சேமிப்புகளை குறைக்கும். முடிந்தளவுக்கு சிக்கனமாக செலவு செய்யுங்கள், ஆடம்பர பொருட்களை வாங்குவது வேண்டாம்.
இந்த வாரம் நீங்கள் செய்யும் செலவுகள் அனைத்தும், உங்கள் எதிர்காலத்தை வலமாக்கும் சேமிப்பு திட்டங்களாக இருப்பது நல்லது. இந்த வாரம் வாங்கும் நிலம், வீடு, மனை போன்றவை எதிர்காலத்தில் உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் செல்வங்களாக இருக்கும் என்பதை உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
எண் 5
நியூமராலஜி எண் 5 கொண்டவர்களுக்கு இந்த வாரம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குறிப்பாக, பணியிடத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், உங்கள் தினசரி இலக்குகளை முடிக்க உதவி செய்வார்கள். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுடன் இணைந்து அறிவியல் கண்டுப்பிடிப்புகளை உருவாக்கலாம்.
தங்கள் கல்லூரி மற்றும் பெற்றோரின் பெயரை காப்பார்கள், பெருமை சேர்ப்பார்கள். நிதி நிலையை பொறுத்தவரையில் பெரிய பிரச்சனைகள் இருக்காது, பழைய கடன்கள் குறையும், செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்கும் வாய்ப்பும் காணப்படுகிறது.
எண் 6
எண் கணித எண் 6 கொண்டவர்கள் இந்த வாரம், ஆன்மிகத்தை நாடி செல்வார்கள். குறிப்பாக, தங்கள் தொழில் வாழ்க்கையின் வெற்றியை வேண்டி இறைவழிபாடு, ஆன்மீக பயணங்கள் என பிஸியாக இருப்பார்கள். தங்கள் வழிபாட்டின் பலனாய், விஷ்ணு பகவானின் ஆசி பெறுவதோடு, தொழில் வாழ்க்கையில் காணப்படும் தடைகளையும் போக்கி, முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.
புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு காணப்படுகிறது. ஏற்கனவே தொழில் செய்து வரும் நபர்களுக்கும் சிறப்பான ஒரு காலத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக, நகை, வைரம் விற்பனை செய்து வரும் நபர்களுக்கு வருமானம் ரீதியாக சிறப்பான ஒரு காலமாக இது அமையும்.
எண் 7
விதி எண் 7 கொண்டவர்களுக்கு இந்த வாரம் திருப்பங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய பலன்கள் கிடைக்கும், குறிப்பாக காதல் வாழ்க்கையில் கனவுகள் நிஜமாகும் ஒரு வாரமாக இருக்கும். நிபுணர்கள் கணிப்புப்படி இந்த வாரம் உங்கள் மனதிற்கு பிடித்த நபர், அவராக வந்து உங்கள் மீது அவர் கொண்டிருக்கும் காதலை தெரியப்படுத்துவார்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள், உங்கள் தனித்திறமைகளை வெளிப்படுதுதவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக நடந்துக்கொள்வார்கள். உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமையும் ஒரு வாரமாக இது இருக்கும்.
எண் 8
பிரச்சனைகள் முடிவுக்கு வரும் ஒரு காலமாக இந்த வாரம் எண் 8 கொண்டவர்களுக்கு இருக்கும். தொழில் வாழ்க்கை, மண வாழ்க்கை என இரண்டிலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். குறிப்பாக திருமணம் முடித்தவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் சந்தித்து வந்த முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் காலமாக இந்த வாரம் பார்க்கப்படுகிறது.
நிதி நிலையை பொறுத்தவரையில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வந்து சேரும், முன்னர் செய்து வைத்த பங்குச்சந்தை முதலீடுகள் வழியே எதிர்பாராத லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க, நிதி நிலை சிறப்பாக அமையும் இருப்பினும் பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பது கூடாது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எண் 9
நியூமராலஜி எண் 9 கொண்டவர்களுக்கு இந்த வாரம், சவால்கள் நிறைந்த ஒரு வாரமாக இருக்கும். வாரத்தின் முதல் பாதி கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குறிப்பாக அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் தலையீடு உங்கள் பணிகளை நிறைவாக செய்ய விடாமல் தடுக்கும். காதல் வாழ்க்கையை பொறுத்தவரையில் உங்கள் உணர்வுகளை புரிந்து நடந்துக்கொள்வார் உங்கள் காதல் துணை.
உங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடையவும் உதவி செய்வார். காதல் உறவில் இல்லாதவர்கள் விரைவில் காதல் உறவில் இணையும் வாய்ப்பு காணப்படுகிறது. காதல் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லா நபர்கள், பெற்றோர் வழிகாட்டுதல் படி தங்கள் குடும்பத்திற்கு பொருத்தமான நபர் ஒருவரை தேர்வு செய்து விரைவில் திருமணம் முடிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.