Aug 10, 2025 - 01:07 PM -
0
இலங்கை முழுவதும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது இன்று (10) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
அந்தவகையில் நானுஓயா நகரில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்தது.
நானுஓயா நகரில் மத்தியில் அமைந்துள்ள மமா/நு/நாவலர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைத்தந்தனர்.
அத்துடன் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடமும் பெற்றோர்களிடமும் ஆசிகள் பெற்று பெற்றோர்கள் இன்று காலை ஆர்வத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துவந்ததையும் காணமுடிந்தது.
நானுஓயா நகரில் அத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
--