Aug 10, 2025 - 03:32 PM -
0
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமான போது பார்வையற்ற மாணவியொருவரும் பரீட்சைக்கு தோற்றினார்.
மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் பயின்று வரும் இம்மாணவி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறவியிலேயே பார்வை இழந்த இம் மாணவி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலிருந்து இன்று காலை பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
--