Aug 11, 2025 - 12:56 PM -
0
தென் கொரியாவில் பிறப்பு வீதம் குறைந்தமையினால், அந்த நாட்டின் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு நேற்று (10) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 6 ஆண்டுகளில் இராணுவத்தினரின் எண்ணிக்கை 20% ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தென் கொரிய இராணுவத்தில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் குறைவடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் குறைந்தபட்சம் 5 இலட்சம் இராணுவ சிப்பாய்களை பேணும் நோக்கில் தேசிய அளவில், தீர்க்கமான நடவடிக்கைகள் அவசியம் என்றும் கொரிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
உலகிலேயே குறைந்த பிறப்பு வீதம் கொண்ட நாடாக தென்கொரியா பதிவாகியுள்ளது.
அந்த நாட்டின் பிறப்பு வீதமானது 2018 இல் 0.98 ஆகவும், 2020 இல் 0.84 ஆகவும், 2023 இல் 0.72 ஆகவும், 2024 இல் 0.75 ஆகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.