Aug 12, 2025 - 09:18 AM -
0
இன்று (12) சந்திர பகவான் மீன ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வந்திருக்கிறார். சனி மற்றும் செவ்வாய் சம சப்தம ஸ்தானத்தில் வந்திருக்கின்றனர் இன்று உருவாகி சர்வசித்தி யோகத்தால் பல ராசிக்கு நன்மை கிடைக்கும். 12 ராசிகள் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு இன்று சாதகமற்ற நாள். வேலையிலும் சிறப்பு கவனம் செலுத்தவும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சி செய்யவும். திருமண வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்கும். வேலை தொடர்பாக மிகவும் மும்முரமாக செயல்படுவீர்கள். அரசு வேலைக்கு தயாராக கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உற்சாகத்தால் அதிகமாக செலவு செய்ய நினைத்தீர்கள்.
ரிஷபம் ராசிபலன்
உங்களுக்கு சராசரியான நாளாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் சில ஏமாற்றங்கள் சந்திக்க நேரிடும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் கவனமாக செயல்படவும். பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழிகள் பிறக்கும். இன்று உங்கள் வியாபாரம் தொடர்பாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். நிதி சார்ந்த விஷயங்களில் சவாலானதாக இருக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறலாம். வியாபாரம், தொழில் தொடர்பாக முன்னேறி செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்களின் வேலை எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். சிலருக்கு பதவி நல்லது சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் நிதிநிலை தொடர்பாக ஸ்திர தன்மை அதிகரிக்கும். சொத்து தொடர்பாக பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று உங்கள் உரிமைகளை பெறுவதற்காக வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு காதல் மலரும்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு இன்று வேலையில் பெரிய வெற்றி பெறுவீர்கள். சில நாட்களாக தடைபட்டு வந்த வேலைகளை முடிக்க முடியும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். காதல் தொடர்பான விஷயத்தில் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் துணையிடம் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து சென்றால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று உங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிப்பீர்கள். உங்கள் உறவில் ஆழத்தை அதிகரிக்க கூறிய நாள். வேலை தொடர்பாக புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பங்கு சந்தை முதலீடுகள் லாபத்தை தரக்கூடியதாக அமையும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு இன்று சாதகமான நாள் இல்லை. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்து, நிதானமாக எதிலும் செயல்படவும். இன்று உங்கள் வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும், கடினமான நேரத்தில் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேச உங்களின் மனக்குழப்பம் தீரும். உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்தும். உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும். உங்கள் வேலையில் நிலையான தன்மையை பராமரிப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வீடுகளில் சிரமங்களை சந்தித்தாலும் அதில் வெற்றி பெற முடியும். முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் குழப்பமான மனநிலை இருக்கும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ஏனெனில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் தொடர்பாக எச்சரிக்கையாக செலுத்தவும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுவது நல்லது. காதல் விஷயத்தில் சாதகமான நாளாக இருக்கும். இருப்பினும் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.
துலாம் ராசிபலன்
துலாம் ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் கனவுகள் நனவாக்க கிடைக்கும். தொழில் தொடர்பாக சில பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக பொறுப்பாக செயல்படுவார்கள். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்திருக்கும். இன்று புதிய ஒப்பந்தங்கள் பெறுவதிலும், வேலையை செய்து முடிப்பதில் திட்டமிடுதல் கவனம் தேவை. மருத்துவ துறையில் முன்னேற்றம் இருக்கும். நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று கடின உழைப்புக்கான பணம் கிடைக்கும். இலக்குகளை அடைவதற்காக திட்டமிட்டு தயாராக செயல்படவும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும்.. உங்கள் வேலை தொடர்பாக பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். வழக்கத்தை விட குழப்பமான மனநிலையில் முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். உங்கள் எதிரிகளிடமிருந்து விலகி இருப்பது நல்லது. இன்று வாழ்க்கையில் அதிக பொறுமை தேவைப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டிய நாள். இன்று பொழுது போக்கு தொடர்பான விஷயங்களில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் ஆற்றலையும், நேரத்தையும் சரியாக பயன்படுத்த முயற்சிக்கவும். உங்களுக்கு ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும்.
தனுசு ராசிபலன்
தனுசு ராசிக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். பழைய தடைப்பட்ட வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்தவும். பணத்தை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்தவும். உங்கள் தேவைகளை சரியாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பாக லாபத்தை ஈட்ட கடின உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உங்களுக்கு வரவேண்டிய பணம் கிடைப்பதில் சவால் நிறைந்திருக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். உங்கள் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் திட்டங்களை முடிக்க பிஸியாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பு தொடர்பாக முன்னேற்றம் இருக்கும். சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தாங்கள் தொடர்பான விஷயங்களில் ரகசியங்களை காப்பது நல்லது.சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று உங்கள் உறவுகளை மேம்படுத்த பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனம் செலுத்தவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு சாதகமான நாள். உங்கள் செயல்பாடுகளில் சிறிது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எண்ணங்களை கட்டுப்படுத்தி, செயல்களில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். இன்று உங்களை சுற்றி உள்ளவர்களுடன் பேச்சில் இனிமையே கடைபிடிக்கவும். தொழில் தொடர்பாக அதிகமாக சம்பாதிக்க புதிய வழிகளை தேட வேண்டியது இருக்கும். இன்று குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் தொடர்பாக சாதகமான நாள். உங்கள் துணையுடன் விருந்துக்கு செல்ல நினைப்பீர்கள். எதிர்காலத்திற்கான திட்டமிடல் தொடர்பாக விவாதிப்பீர்கள். உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு உங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் நாள். வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் சிறப்பாக எதிர் கொள்ள முடியும். உங்களுக்கு குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் அவர்களின் ஆதரவு கிடைக்கக்கூடிய நாளாகவும் இருக்கும். உங்களுக்கு பிடித்தமான உணவு ருசிக்க முடியும். புதிய முதலீடுகள் மற்றும் பழைய முதலீடுகளில் இருந்து வருமானம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் படிப்பில் புதிய வழிகளில் கல்வி கற்க நினைப்பார்கள். உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.