மலையகம்
ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Aug 12, 2025 - 10:50 AM -

0

ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

பலாங்கொட பகுதியில் இருந்து ஹட்டன் பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கொண்டு வந்த சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் குற்றவியல் பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் நேற்று (11) காலை 06.30 மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் குற்றவியல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

பலாங்கொட பகுதியிலிருந்து ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா ஆகிய பகுதிகளுக்கு மரக்கறிகள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியில் இந்தக் கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். குறித்த முச்சக்கர வண்டியை பரிசோதனை செய்தபோது, இந்தப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபர் இப்பகுதிகளுக்கு கஞ்சாவை விநியோகித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

மேலும், பொலிஸ் மோப்ப நாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரால் கொண்டுவரப்பட்ட மற்றொரு தொகை கஞ்சா ஏற்கனவே சில பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என குற்றவியல் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், முச்சக்கர வண்டியையும் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05