Aug 12, 2025 - 02:12 PM -
0
இலங்கையின் பாரம்பரிய கலாசாரத்தை பேணும் வகையிலும், டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும், தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) சேவை வழங்குனர் எனும் பங்காண்மையை தொடர்ச்சியான 10ஆவது வருடமாக மேலும் நீடித்துள்ளது.
இக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஆதரவளித்து வருவதுடன், இலங்கையின் மிகவும் புனிதமான சமய மற்றும் கலாசார தலத்துக்கு ஒப்பற்ற நவீன தொழினுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான SLT-MOBITEL இன் ஆழமான அர்ப்பணிப்பும் இந்த பங்காண்மையினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் இந்த கைகோர்த்த செயற்பாட்டினூடாக, SLT-MOBITEL இனால் மாளிகைக்கு, ஃபைபர் வலுவூட்டப்பட்ட அதிகவேக இணைய, PEO TV மற்றும் குரல் அழைப்பு சேவைகள் போன்றன இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த நவீன சேவைகளினூடாக, மாளிகையின் ஊடக நிலையத்துக்கு புனித சமய வைபவங்கள் தொடர்பில் ஒளிபரப்பினை அஞ்சல் செய்யவும், கலாசார அம்சங்களை முழு உலகையும் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு காண்பிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
கண்டி எசல பெரஹர நிகழ்வின் நேரலை ஒளிபரப்பினை அஞ்சல் செய்வதில் உதவிகளை வழங்கும் வகையில் SLT-MOBITEL இன் பங்காண்மை அமைந்துள்ளது. நவீன தகவல் தொடர்பாடல் தொழினுட்ப உட்கட்டமைப்பைக் கொண்டு, இலங்கை மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் நேரடியாக தொலைக்காட்சியினூடாகவும், டிஜிட்டல் தளங்களினூடாகவும் கண்டுகளிக்க SLT-MOBITEL இனால் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
நேரலை நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, SLT-MOBITEL இன் தீர்வுகளினால், இலங்கையின் பாரம்பரியத்தை நவீன இணைப்புத்திறன் வசதியினூடாக, ஆவண படங்கள், புகைப்படங்கள் மற்றும் நிகழ்வின் சிறப்பு அம்சங்களை ஆவணக்காப்பகத்தில் வைப்பதற்கும் SLT-MOBITEL இன் தீர்வுகள் உதவியாக அமைந்துள்ளன.

