வணிகம்
Daraz Sri Lanka நிறுவனம் 8.8 Brand Prix Sale ஊக்குவிப்பு மூலமாக சேமிப்புக்களை விரைவுபடுத்துகின்றது

Aug 12, 2025 - 02:20 PM -

0

Daraz Sri Lanka நிறுவனம் 8.8 Brand Prix Sale ஊக்குவிப்பு மூலமாக சேமிப்புக்களை விரைவுபடுத்துகின்றது

ஆகஸ்ட் மாதத்தின் பரபரப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில், ஒப்பற்ற தள்ளுபடிகள், பாரிய வவுச்சர் பரிசுகள், மற்றும் பிரத்தியேகமான வர்த்தகநாம சலுகைகள் நிறைந்த, ஒரு வார கால ஷொப்பிங் கொண்டாட்டமான 8.8 Brand Prix Sale என்ற ஊக்குவிப்பை Daraz Sri Lanka ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 15 வரை இடம்பெறுகின்ற இந்த விற்பனை ஊக்குவிப்பு நிகழ்வானது, மதிப்பை நாடுகின்ற இலங்கை நுகர்வோருக்கு, இந்த ஆண்டில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளில் ஒன்று என்பதற்கு உத்தரவாதமளிக்கின்றது. 

வாடிக்கையாளர்கள் வெகு வேகமாகச் சேமிப்பதற்கான வழிமுறையை Brand Prix ஊக்குவிப்புச் சலுகை அவர்களுக்கு வழங்குவதுடன், உச்ச தயாரிப்பு வகைகள் மத்தியில் 18,000 க்கும் மேற்பட்ட சலுகைகளை வழங்குகின்றது. புதிய மொபைல் தொலைபேசிகள், சமையலறை சாதனங்கள், நவநாகரிக தெரிவுகள், அழகு பராமரிப்பு தயாரிப்புக்கள் என நீங்கள் விரும்பும் அனைத்தையும் ரூபா 88, ரூபா 888, மற்றும் ரூபா 8,888 என்ற ஆகக் குறைந்த விலை முதற்கொண்டு Daraz வழங்குகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட காலத்திற்கு வழங்கப்படுகின்ற இச்சலுகைகள், எயார் ப்ரையர் (air fryer) எரிவாயு அடுப்புக்கள் முதல் பிரபல வர்த்தகநாமங்களின் கீழ் வெளிவரும் கைக்கடிகாரங்கள், வயர்லெஸ் ஹெட்போன்கள், மற்றும் டிவிக்கள் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன. 

நவநாகரிக ஆடையணி மீது பிரியம் கொண்டவர்கள், Amante, Moose Clothing, Trendy Clothing, மற்றும் The Factory Outlet போன்ற பிரபலமான வணிக நிறுவனங்களிலிருந்து 50% வரை தள்ளுபடிகளைப் பெற்று, தமது அலுமாரிகளை புதியவற்றால் நிரப்பிக் கொள்ள முடியும். தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு 50% வரையான தள்ளுபடிகளுடன், 40 க்கும் மேற்பட்ட வர்த்தகநாமங்களின் மூலமாக தனித்துவமான அழகு பராமரிப்பு மற்றும் வீட்டுப் பாவனைக்கான அத்தியாவசியப் பொருட்களும் இந்த ஊக்குவிப்புச் சலுகை மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றன. Cliara க்கு நேரடி 25% தள்ளுபடியும், Janet மற்றும் Luv Essence நேரடி தள்ளுபடியும் கிடைக்கப்பெறுவதுடன், இவை இரண்டும் முதல்முறையாக இலங்கையில் இந்த அளவில் நாடளாவிய Daraz ஊக்குவிப்புப் பிரச்சாரத்தில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அன்றாட அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்கப்பெறுவதுடன், Pelwatte பால் மாவுக்கு 20% தள்ளுபடி கிடைக்கின்றது. வாழ்க்கைமுறை பொருட்களை கொள்வனவு செய்ய விரும்புகின்றவர்களைப் பொறுத்தவரையில், Phoenix Plastics மற்றும் Bean Bag Sri Lanka ஆகியன நேரடி 25% தள்ளுபடியை வழங்குவதுடன், Celcius Pillows அரைவாசி விலையிலும், மற்றும் Swisstek தயாரிப்புக்கள் 15% தள்ளுபடியிலும் கிடைக்கப்பெறுகின்றன. அத்துடன், Stylux Paints மூலமாக 20% தள்ளுபடி, Coofix Sri Lanka மற்றும் HSP Plastic இடமிருந்து ஊக்குவிப்புச் சலுகைகளும் கிடைக்கப்பெறுகின்றன. 

இலத்திரனியல் சாதனங்களைப் பொறுத்தவரையில், Samsung Fold 7, அத்துடன் Samsung Flip 7 மற்றும் OnePlus 13 ஆகியன இந்த ஊக்குவிப்புச் சலுகையின் மூலமாக பிரத்தியேகமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. Apple, Samsung, மற்றும் Xiaomi ஸ்மார்ட்போன்களை சந்தையில் ஆகக் குறைந்த விலைகளில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க முடியும். இந்த ஊக்குவிப்புச் சலுகையின் ஒரு பகுதியாக பல்வேறு புதிய வர்த்தகநாமங்களும் அறிமுகமாக்கப்பட்டுள்ளன. Daraz Mall ல் Vivo மற்றும் boat ஆகியவற்றின் உத்தியோகபூர்வ அறிமுகம், Singer Mobiles அறிமுகப்படுத்தும் Nubia, ZTE, மற்றும் Honor சாதனங்களும் அவற்றுள் அடங்கியுள்ளன. Blackview Tablets மற்றும் UGreen ஆகியனவும் Daraz மூலமாக இலங்கையில் உத்தியோகபூர்வ விற்பனை மையங்களை ஆரம்பித்துள்ளன. 

நம்பிக்கைக்குரிய ஷொப்பிங் தேவைக்கான இத்தளத்தின் பிரதான மார்க்கமான Daraz Mall ஊடாகவும் இச்சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. மிகச் சிறந்த விலைகளுக்கான உத்தரவாதத்துடன் பரந்த வகைப்பட்ட 100% அசல் வர்த்தகநாமங்களை வாடிக்கையாளர்கள் இங்கே கண்டறிய முடியும். பரந்து பட்ட தயாரிப்பு வகைகள் மத்தியில், சான்றுபடுத்தப்பட்ட விற்பனையாளர்கள், உத்தியோகபூர்வ வர்த்தகநாம விற்பனை மையங்கள், மற்றும் பாதுகாப்பான விநியோகம் ஆகியவற்றினூடாக Daraz Mall அனைவருக்கும் நிம்மதியளிக்கின்றது. 

Unilever, Hemas Manufacturing, Diamond Best Food, GSK, Maliban மற்றும் DSI Sri Lanka உள்ளிட்ட உச்ச தேசிய மற்றும் பல்தேசிய நாமங்களும் மிகவும் கேள்வி நிலவும் தயாரிப்பு வரிசைகள் மத்தியில் பிரத்தியேகமான சலுகைப் பொதிகள், ஏற்பாடு செய்யப்பட்ட சலுகைகள், மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட காலத்திற்கு விலைக்கழிவுகளுடன் 8.8 Brand Prix Sale ஊக்குவிப்பு நிகழ்வுடன் கைகோர்த்துள்ளன. தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை எதிர்பார்க்கின்ற வாடிக்கையாளர்களுக்கு உண்மையான மதிப்பை வழங்க வேண்டும் என்ற இப்பிரச்சாரத்தின் நோக்கத்தின் மையமாக மேற்குறிப்பிட்ட வர்த்தக கூட்டாளர்கள் காணப்படுகின்றனர். 

சேமிப்புக்களை இன்னும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் வகையில், முன்னணி வங்கிகள் மற்றும் கொடுப்பனவுத் தளங்களுடன் Daraz கைகோர்த்துள்ளது. கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி (Youth & Teen+), NTB AmEx அல்லது சம்பத் வங்கி அட்டைகளை உபயோகிக்கும் கொள்வனவாளர்களுக்கு 15% வரை தள்ளுபடிகள் கிடைக்கப்பெறும் அதேசமயம், KOKO வை உபயோகிக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு தமது கொள்வனவுகளின் போது கூடுதல் சேமிப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன. Daraz ன் சொந்த தள்ளுபடி வவுச்சர்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு இலவச விநியோகத்துடன், 9% வரையான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 

Brand Prix கருப்பொருளானது இணைய வழி ஷொப்பிங்கிற்கு அதிவேக பந்தயத்தின் விறுவிறுப்பை சேர்ப்பிக்கின்றது. Grand Prix ஐப் போலவே, மிகச் சிறந்த சலுகைகள் முடிவடைந்து போவதற்கு முன்பதாக, வாடிக்கையாளர்கள் அவற்றை விரைவாக பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அன்றாட வெகுமதிகள், பிரத்தியேக சலுகைகள், மற்றும் குறித்த தினத்தில் மிகப் பாரிய சலுகைகள் குறித்த நேரலை தகவல் புதுப்பிப்புக்களை ஆராய்வதற்கான முக்கியமான மார்க்கமாக Daraz app காணப்படுகின்றது. 

Daraz Sri Lanka ன் பிரதம வர்த்தக அதிகாரி பிரவீன் ருக்ஷான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “8.8 Brand Prix பிரச்சாரமானது இணையவழி ஷொப்பிங்கிற்கு அதிவேக பந்தயத்தின் விறுவிறுப்பைச் சேர்ப்பிக்கின்றது. ஒப்பற்ற சலுகைகள், உயர் மட்ட வர்த்தகநாம கூட்டாண்மைகள், மற்றும் Daraz app ன் வலுவான, விநோதமான அனுபவம் ஆகியவற்றினூடாக, வாடிக்கையாளர்களுக்கு நாம் சிறந்த வாய்ப்புக்களை வழங்குகின்றோம். ஒவ்வொரு கொள்வனவின் போதும் கூடுதல் தெரிவு, கூடுதல் சேமிப்புக்கள், மற்றும் கூடுதல் விறுவிறுப்பு ஆகியவற்றை வழங்கி, இந்த ஆண்டில் மிகவும் ஈடுபாடுகளை வளர்க்கும், மற்றும் வெகுமதியளிக்கும் ஷொப்பிங் நிகழ்வுகளில் ஒன்றாக இதனை மாற்றுவதே எமது இலக்கு,” என்று குறிப்பிட்டார். 

Brand Prix Sale ஊக்குவிப்புப் பிரச்சாரத்தில் பங்குபற்றி, ஷொப்பிங் அனுபவத்தை முழு வேகத்தில் பெற்றுக்கொள்ள, ஆகஸ்ட் 8 முதல் 15 முதல் Daraz app ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு, அல்லது www.daraz.lk என்ற இணையத்தளத்திற்கு வருகை தருமாறு வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 

Daraz குழுமம் குறித்த விபரங்கள் 

2015 ல் ஸ்தாபிக்கப்பட்ட Daraz, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் e-commerce தளமாகத் திகழ்ந்து வருகின்றது. 500 மில்லியன் சனத்தொகையுடன், மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பிராந்தியத்தை இலக்கு வைத்து, அதிநவீன சந்தைப்பரப்பு தொழில்நுட்பத்துடன், விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் என இரு தரப்பினருக்கும் வலுவூட்டுகின்றது. e-commerce, விநியோக வழங்கல் ஏற்பாடு, கொடுப்பனவு மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்பி, ஈர்க்கின்ற, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்கி, வர்த்தகத்தின் ஆற்றல் மூலமாக தெற்காசிய சமூகங்களை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவு செய்து www.daraz.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது நிறுவனம் குறித்த தகவல் விபரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள LinkedIn (www.linkedin.com/company/daraz/) மூலமாக Daraz உடன் இணைப்பில் இருங்கள்.  

ஊடகத் தொடர்புகளுக்கு - ambar.ahmed@daraz.pk

Comments
0

MOST READ
01
02
03
04
05