Aug 12, 2025 - 03:42 PM -
0
55 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் INSEE சங்ஸ்தா மற்றும் மகாவலி Marine Plus ஆகிய முதன்மை வர்த்தக நாமங்களைக் கொண்ட இலங்கையின் முதன்மையான சீமெந்து நிறுவனமான INSEE சீமெந்து, இலங்கையின் கட்டுமானத் துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கும் நோக்கில் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனத்துடன் (SLINTEC) கைகோர்த்துள்ளது.
இப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் இரு அமைப்புகளின் சிரேஷ்ட தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்தானது. INSEE சீமெந்து சார்பாக பிரதம செயற்பாட்டு அதிகாரி துசித் குணவர்ணசூரிய, உற்பத்திப் பணிப்பாளர் சுஷில் ரதோர், தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் பிரிவின் பணிப்பாளர் Dr. மௌஸா பால்பக்கி மற்றும் தரம் மற்றும் தொழில்நுட்பத்தின் பொது முகாமையாளர் காலிந்த தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
SLINTEC சார்பாக, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் சமன் செனவீர, முதன்மை விஞ்ஞானி Dr. சஞ்சீவ விஜேசிங்க, வணிக மேம்பாட்டுத் துறை நிர்வாகி செவ்மினி யாபா மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி நதுன் ரனேபுர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதம செயற்பாட்டு அதிகாரி துசித் குணவர்ணசூரிய கருத்து தெரிவிக்கையில், தொழில்துறை தலைவராக, INSEE சீமெந்து, அர்த்தமுள்ள மாற்றத்தை ஊக்குவிக்கும் மூலோபாய ஒத்துழைப்புகள் ஊடாக இலங்கையின் கட்டுமானத் துறையை முன்னேற்ற உறுதிபூண்டுள்ளது. SLINTEC உடனான இணைவு, குறைந்த காபனுடனான எதிர்காலத்திற்குத் தயாரான கட்டுமானத் தீர்வுகளை உருவாக்குவதை ஆதரிப்பதோடு இத் தொழில்துறையை சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவதை உறுதி செய்யும். என்றார்.
இந்த மூலோபாய இணைவு, நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் சிறப்பை மையமாகக் கொண்டு அதன் தயாரிப்புக்களை மேலும் முன்னேற்ற INSEE சீமெந்திற்கு உதவும். சந்தைத் தலைவராக INSEE சீமெந்து, இவ் இணைவு ஊடாக தொழில்துறை தரங்களை வடிவமைப்பதற்கும் இலங்கையின் கட்டுமானத் துறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் எண்ணியுள்ளது.
இம் முன்முயற்சி, கட்டுமானத் துறையில் புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. அவர்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் தொலைநோக்கு சிந்தனையையும் இணைத்து எதிர்காலத்திற்குத் தயாரான, சுற்றுச்சூழல் பொறுப்பான தீர்வுகளை உருவாக்குவார்கள். இது மிகவும் வலுவான தொழில்துறைக்கு வழி வகுப்பதோடு நிலையான கட்டுமான நடைமுறைகளுக்கு புதிய அளவுகோல்களை உருவாக்கும்.

