வணிகம்
பிராண்ட் ஃபினான்ஸினால் மீண்டும் ஒருமுறை இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாக செலிங்கோ லைஃப் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

Aug 12, 2025 - 03:53 PM -

0

பிராண்ட் ஃபினான்ஸினால் மீண்டும் ஒருமுறை இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாக செலிங்கோ லைஃப் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபினான்ஸ் (Brand Finance) வெளியிட்ட ஷஇலங்கையின் சிறந்த 100 நிறுவனங்கள்| 2025 பதிப்பில், செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் ஒட்டுமொத்தமாக நாட்டின் 22வது மதிப்புமிக்க வர்த்தக நாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

பிராண்ட் ஃபினான்ஸ் ஆனது, செலிங்கோ லைஃப் பெருநிறுவன வர்த்தகநாமத்திற்கு ரூ. 6.45 பில்லியன் பெறுமதி மற்றும் AAA- வர்த்தகநாம மதிப்பீட்டை வழங்கியுள்ளது, இது சந்தையில் அதன் வலிமை மற்றும் நற்பெயரை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 2023 ஆம் ஆண்டில் 27 ஆவது இடத்தில் இருந்த நிறுவனமானது ஒட்டுமொத்த தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது, அதே வேளை வர்த்தகநாமத்திற்கு ஒதுக்கப்பட்ட பெறுமதியானது 84.3 சதவீதம் அதிகரித்துள்ளது, இது நிலையான வர்த்தகநாம வளர்ச்சி, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் ஆயுள் காப்புறுதித் துறையில் தெளிவான தலைமைத்துவத்தை பிரதிபலிக்கிறது. 

இலங்கையில் ஆயுள் காப்புறுதி மற்றும் ஒட்டுமொத்த காப்புறுதித் துறைகளில் முதலிடத்தில் உள்ள வர்த்தக நாமமாக செலிங்கோ லைஃப் தொடர்ந்து தனது அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2023 தரவரிசையிலும் இது இந்த சிறப்பைப் பெற்றுள்ளது. 

நிறுவனத்தின் அண்மைய தரவரிசை தொடர்பாக கருத்து தெரிவித்த செலிங்கோ லைஃப் சந்தைப்படுத்தல் தலைவர் திரு. திரஞ்சன் கனகசபை, இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்டு, ஒட்டுமொத்த தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறியமையானது செலிங்கோ லைஃப் வர்த்தகநாமத்தின் வலிமைக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். இது மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், பாதுகாப்புக்கான எமது வாக்குறுதியை நாம் நிறைவேற்றும் நிலைத்தன்மையையும் பிரதிபலிக்கிறது. காப்புறுதித் துறையை வழிநடத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம், மேலும் எமது காப்புறுதிதாரர்களுக்கு நீண்டகால பெறுமதியை உருவாக்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம். 

2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது. 

செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05