Aug 12, 2025 - 03:59 PM -
0
பிரசித்தி பெற்ற National Business Excellence Awards (NBEA) 2025 நிகழ்வில், வங்கித்துறைக்கான சிறப்புத்தகுதி விருதைப் பெற்று தனக்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளமை குறித்து SDB வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, கொழும்பிலுள்ள ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றதுடன், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்விருதுகள் நிகழ்வானது தொடர்ந்து 20 வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகள், வலுவான ஆட்சி நிர்வாகம், மற்றும் அதன் தொழிற்பாட்டு கோட்பாட்டில் கணிக்கக்கூடிய சமூக விளைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, குறித்த நோக்கத்துடன் இயங்கி வருகின்ற ஒரு நிதி நிறுவனம் என்ற SDB வங்கியின் ஸ்தானத்தை தற்போது பெற்றுள்ள இவ்விருது வலுவாக உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விருதானது வங்கியின் நிதியியல் பெறுபேற்றுத்திறனை அங்கீகரிப்பது மாத்திரமன்றி, பொறுப்புமிக்க, சமூகத்தை மையமாகக் கொண்ட வங்கிச்சேவையினூடாக தேசிய வளர்ச்சிக்கான அதன் பங்களிப்பையும் அங்கீகரிக்கின்றது.
ஆட்சி நிர்வாகம், நிலைபேற்றியல், புத்தாக்கம், மற்றும் சமூக மதிப்பைத் தோற்றுவித்தல் ஆகியவற்றின் மத்தியில் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்ற நிறுவனங்களைப் போற்றிக் கொண்டாடி, நிறுவன மகத்துவத்திற்கான இலங்கையின் முன்னணி மேடையாக NBEA பரவலாக அங்கீகாரம் பெற்றுள்ளது. Ernst & Young தலைமையில் தொழில்நுட்ப மற்றும் நிதியியல் சபையின் மதிப்பீடுகள், அதனைத் தொடர்ந்து பேராசிரியர் அஜந்த தர்மசிறி மற்றும் திரு. லசந்த சல்காது ஆகியோரின் இணைத்தலைமையில் மதிப்பிற்குரிய நடுவர் அணியால் முன்னெடுக்கப்பட்ட நேர்காணல்கள் அடங்கிய கடுமையான பல கட்ட நடைமுறையினூடாக இந்த ஆண்டுக்கான மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
SDB வங்கியின் நிர்வாகப் பணிப்பாளரும், மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “NBEA நிகழ்வில் 2025 ம் ஆண்டுக்கான வங்கித்துறைக்கான சிறப்புத் தகுதி விருதை வென்றுகொண்டமை, எமது சமூகங்கள் அனைத்திற்கும் நிதியியல்ரீதியாக, சமூக ரீதியாக, மற்றும் சூழல் ரீதியாக அர்த்தமுள்ள மதிப்பை வங்கிச்சேவை தோற்றுவிக்க வேண்டும் என்ற எமது பிரதான நோக்கத்திற்கான கௌரவமாகவும், மற்றும் உறுதிப்படுத்தலாகவும் அமைந்துள்ளது. மேலும், வங்கித்துறையினுள் நாம் பின்பற்றும் நெறிமுறை தவறாத, நிலைபேற்றியலுடன் முன்னெடுக்கப்பட்டுகின்ற அணுகுமுறைக்கு இது சான்றாக உள்ளதுடன், வர்த்தகத்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மற்றும் தொடர்புபட்ட சர்வதேச தரப்பினர் மத்தியில் வங்கியின் தெரிநிலையையும் வலுவாக உறுதிப்படுத்தும் அதேசமயம், மதிப்பிற்குரிய எமது வாடிக்கையாளர் தளத்தின் மத்தியில் நீண்ட கால நம்பிக்கையையும் மேம்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார். தனது தொழிற்பாடுகள் மத்தியில் சமூக சகவாழ்வு மற்றும் நிலைபேற்றியலை உட்பதிக்கும் முயற்சிகளை SDB வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தி, புத்தாக்கத்தை ஆழமாக்கி, மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான நேர்மறை சக்தியாக தொடர்ந்தும் திகழ்வதற்கான ஒரு உந்துசக்தியாக இந்த விருது அமைந்துள்ளது.
SDB வங்கி குறித்த விபரங்கள்:
ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் முழுமையான ஆதரவை வழங்கும் வகையில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் திகழும், எதிர்காலத்திற்கு தன்னை தயாராக்கிக் கொண்டுள்ள SDB வங்கியானது, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கி என்பதுடன், கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தப்பட்டுள்ள, BB +(lka) என்ற Fitch Rating தரமதிப்பீட்டைக் கொண்ட வங்கியாகும். நாடளாவியரீதியில் 94 கிளைகளைக் கொண்ட வலையமைப்புடன், நாடெங்கிலும் தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வணிக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதித் சேவைகளை வழங்கி வருகிறது. சூழல், சமூக மற்றும் ஆட்சி நிர்வாக கோட்பாடுகள் SDB வங்கியின் விழுமியங்களில் மிக ஆழமாக உட்பதிந்துள்ளதுடன், நிலைபேணத்தக்க நடைமுறைகளின் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் வலுவாக கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில், பெண்களுக்கு வலுவூட்டுதல், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க வளர்ச்சி, மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கல் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது.

