வடக்கு
வவுனியா உக்குளாங்குளத்தில் வீட்டின் மீது தாக்குதல் : ஒருவர் காயம்

Aug 12, 2025 - 11:21 PM -

0

வவுனியா உக்குளாங்குளத்தில் வீட்டின் மீது தாக்குதல் : ஒருவர் காயம்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது, 

வவுனியா, உக்குளாங்குளம், சிவன்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் நுழைவாயில் மற்றும் வீட்டு வேலி மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனது. 

தாக்குதல் சத்தத்தையடுத்து வெளியில் வந்த வீட்டு உரிமையாளர் மீதும் அக்குழு தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேற்படி சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05