சினிமா
கூலியில் ரஜினிக்கு ஜோடி இல்லையா?

Aug 13, 2025 - 11:05 AM -

0

கூலியில் ரஜினிக்கு ஜோடி இல்லையா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகிறது. 

படத்தில் ஸ்ருதிஹாசன் இருக்கிறார். அவர் சத்யராஜ் மகளாக வருகிறார். 

அது குணசித்திர கேரக்டர், பூஜா ஹாக்டே ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். மற்றபடி, ரஜினிக்கு ஜோடி இருப்பதாக தகவல்கள் இல்லை. 

பொதுவாக தனது படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை எழுதுவார் லோகேஷ். அவர் இயக்கிய மாநகரம், கைதி, விக்ரம் படங்களில் அப்படிதான். 

மாஸ்டர், லியோவில் மட்டும் விஜய் இமேஜ், வியாபார நோக்கத்திற்காக ஹீரோயினை கொண்டு வந்தார். அவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கிடையாது. 

லோகேஸை பொறுத்தவரையில் வன்முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ரஜினி படம் என்பதால் இதில் வன்முறையை குறைக்கவில்லை என ஒரு பேட்டியில் ஓபனாக பதில் சொல்லியிருக்கிறார். 

ஆனால், ரஜினி படத்தை குழந்தைகள், குடும்பத்தினர் என அனைத்து தரப்பும் விரும்பி பார்ப்பார்கள். இதில் வன்முறை அதிகம், ஏ சான்றிதழ் வேறு, ரஜினிக்கு ஜோடியும் கிடையாது என்பதால் கூலி படத்தின் மீதான ஈர்ப்புதன்மை ஒரு சில வாரத்திலேயே குறையும் என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05