பல்சுவை
அலுவலக நேரத்தில் ஆடி பாடிய கல்வித்துறை அதிகாரி

Aug 13, 2025 - 01:56 PM -

0

அலுவலக நேரத்தில் ஆடி பாடிய கல்வித்துறை அதிகாரி

பஞ்சாப் மாநிலத்தில், அலுவலக நேரத்தில் மனைவியுடன் அலுவலகத்தில் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். 

இந்த வீடியோவை அவரது மனைவி தமது யூடியூபில் வெளியிட்டார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து குறித்த கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த விவகாரம் குறித்து பேசிய தேவி பிரசாத், "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05