Aug 13, 2025 - 01:57 PM -
0
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பகுதியில் ஒருதொகை போதை மாத்திரைகள், வெளிநாட்டு சிகரட்கள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் கடந்த 11 ஆம் திகதி ஏத்தாளை பகுதியில் பொலிஸார் விஷேட சுற்றுவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 379 கிலோ கிராம் பீடி இலைகள், 6,000 வெளிநாட்டு சிகரட்கள் மற்றும் 28,1200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி - ஏத்தாளை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--