வடக்கு
முதல் முறையாக இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு!

Aug 13, 2025 - 03:21 PM -

0

முதல் முறையாக இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு!

ஹிமி கம என திட்டத்தின் வளமான நாடு அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளில் இன்று (13) இலவச காணி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பளை மத்திய கல்லூரியில் காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

 

இவ் நிகழ்வில்கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த, காணி நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், அரசாங்க அதிபர், வடக்கு மாகண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இவ் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வில் பல காலமாக காணிக்கான பத்திரங்கள் இல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் காணி உரிமையாளர்கள் 332 பேருக்கு காணி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05