Aug 13, 2025 - 06:03 PM -
0
கடந்த 24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேஸ் நடத்திய தாக்குதல்களில் 123 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 437 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 21 உதவி கோருபவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், 3 சிறுவர்கள் உட்பட சுமார் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர்,
இதனால் பட்டினியால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 106 சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.