சினிமா
கிஸ் படத்தின் வௌியீடு குறித்து அறிவிப்பு

Aug 13, 2025 - 06:46 PM -

0

கிஸ் படத்தின் வௌியீடு குறித்து அறிவிப்பு

நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி இயக்கியுள்ள படம்தான் ‛கிஸ்'. 

இதில் ஹீரோவாக கவின் நடித்துள்ளார். நாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 

ஜென் மார்டின் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று சில மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் ஆகாததால் ரிலீஸ் திகதியை ஒத்தி வைத்திருந்தனர். 

தற்போது ஓடிடி விற்பனை நடந்துள்ளதாக சொல்கிறார்கள். இதனால் படத்தை எதிர்வரும் செப்டம்பர் 18ம் திகதி திரைக்கு கொண்டு வர தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05