சினிமா
எப்படி இருக்கிறது ரஜினியின் கூலி படம்?

Aug 14, 2025 - 09:50 AM -

0

எப்படி இருக்கிறது ரஜினியின் கூலி படம்?

லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தரமான 5 படங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் தான் கூலி. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் வழக்கம் போல் தரமாக அமைந்துள்ளது. 

கூலி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வெளியாகியுள்ளது. 

இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், பட வெளியீட்டை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். 

ஏற்கனவே, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூலி திரைப்படம் வெளியாகி முதல் காட்சி திரையிடப்பட்டு வருகின்றது. 

நீண்ட காலத்துக்கு பிறகு, ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். 

இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை நிகழ்த்தி, முதல் நாளே கூலி திரைப்படம் சாதனை படைக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்தியா உள்பட 100 நாடுகளில் மொத்தமாக 4500 - 5000 திரைகளில் கூலி திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இன்று (14) ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

இதனை தொடர்ந்து கூலி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த வசூல் சாதனை செய்து, 1,000 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெறுமா என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05