Header Logo

பல்சுவை
இளைஞனை அடித்துக்கொன்ற கும்பல்!

Aug 14, 2025 - 09:58 AM -

0

இளைஞனை அடித்துக்கொன்ற கும்பல்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நபரை, ஒரு கும்பல் அடித்தே கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

பீட்டாவாட் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கான் (வயது 20), இவர் பொலிஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக ஜாம்னர் நகருக்கு சென்றுள்ளார். விண்ணப்பித்து முடித்த உடன், அருகில் உள்ள கடையில் காபி குடித்தவாறு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கான் உடன் தகராறு செய்து கொடூரமாக அடித்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் வசித்து வந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டை, இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். கானின் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது. இறுதியாக கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக புகார் அளித்து, அடித்து கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொலிஸ் நிலையத்தை கானின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே உள்ள பழைய பகையால் கான் அடித்துக் கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!