மலையகம்
நானுஓயாவில் லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து!

Aug 14, 2025 - 10:16 AM -

0

நானுஓயாவில் லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து!

நுவரெலியா - ஹட்டன் ஏ - 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற சிறிய ரக லொறியே நானுஓயா பங்களாவத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

 

விபத்தில் காயமுற்ற சாரதியும் மற்றொருவரும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போது நுவரெலியா மாவட்டத்தில்  நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பணிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05