Aug 14, 2025 - 11:24 AM -
0
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (14) உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை ரசிகர்கள் அதிரவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் ரஜினிகாந்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், 'முதல்முறையாக உங்களை சந்தித்தபோது என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை தலைவா, திரைத்துறையில் உள்ளவர்களும் சரி, உங்களை தெரிந்தவர்களும் சரி. உங்களை ஆழமாக நேசிப்பதற்கு காரணம் நீங்கள் ஒரு நல்ல மனிதர். விசுவாசமான ரசிகர்களின் அன்பு என்றென்றும் தொடரும். கூலி படம் வெற்றியடைய வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.