வணிகம்
தலைமைத்துவம், புத்தாக்கம், மற்றும் நீடித்த வளர்ச்சியில் 23 ஆண்டுகளை சதாஹரித பிளான்டேஷன்ஸ் பூர்த்தி செய்துள்ளது

Aug 14, 2025 - 11:36 AM -

0

தலைமைத்துவம், புத்தாக்கம், மற்றும் நீடித்த வளர்ச்சியில் 23 ஆண்டுகளை சதாஹரித பிளான்டேஷன்ஸ் பூர்த்தி செய்துள்ளது

இலங்கையில் வணிகரீதியான வனவியல் முதலீட்டில் 1 வது ஸ்தானத்தில் திகழும் நிறுவனமும், வல்லப்பட்டை உற்பத்தியில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனமுமான சதாஹரித பிளான்டேஷன்ஸ், இந்த ஆண்டில் தனது 23 வது ஆண்டு நிறைவைப் பெருமையுடன் கொண்டாடுகிறது. நீடித்து நிலைபெறும் சூழல்நேய முதலீடுகள் மீது இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட தூரநோக்கு, புத்தாக்கம், மற்றும் இடைவிடாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் முன்னிலை வகித்து வருவதை இச்சாதனை பிரதிபலிக்கின்றது. 

முக்கியத்துவம் வாய்ந்த இக்கொண்டாட்டத்திற்கு மெருகேற்றும் வகையில், 1.05 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துத் தளத்தைக் கடந்து தொழிற்துறையில் முதலாவதாக இதனை நிலைநாட்டி, சாதனை படைத்துள்ள சதாஹரித, இந்த சாதனை இலக்கினை எட்டிய இலங்கையின் ஒரேயொரு வணிகரீதியான வனவியல் முகாமைத்துவ நிறுவனம் என்ற பெருமையையும் நிலைநாட்டியுள்ளது. 

இலங்கையில் சூழல்நேய முதலீட்டுத் துறையில் பரிணாம மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் 2002 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சதாஹரித, ரூபா 214 பில்லியன் தேறிய சொத்து மதிப்பைக் கொண்டுள்ள கூட்டு நிறுவனங்கள் குழுமமாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், 50,000 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக வலுவான பிரதிபலனை வழங்கி வந்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களை இந்நிறுவனம் நாட்டியுள்ளதுடன், அறுவடைப் பிரதிபலன்களாக ரூபா 1.7 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைப் பகிர்ந்தளித்து, நம்பிக்கைமிக்க, மற்றும் பெறுபேறுகளால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற முதலீட்டுக் கூட்டாளராக தனது நன்மதிப்பை ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது. 

தொழிற்பட ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, வல்லப்பட்டை, தேக்கு, வனிலா, மற்றும் ஏனைய உயர் ரக வனவியல் உற்பத்திகளுடன், பாதுகாப்பான, அதிக பிரதிபலனை ஈட்டித் தருகின்ற முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கி, தொழிற்துறையை சதாஹரித வழிநடாத்தியுள்ளது. இன்று உலகளாவில் முதல் பத்து ஸ்தானங்களுக்குள் இடம்பிடித்துள்ள வல்லப்பட்டை நிறுவனங்கள் மத்தியில் அது இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை, ஐக்கிய இராச்சியம், மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளில் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது. 

மடகஸ்காரிலுள்ள அதன் பிரதான பெருந்தோட்டம், 5,295 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் பரந்துள்ளதுடன், சர்வதேச ரீதியாக சுமார் 9,000 ஏக்கர் பெருந்தோட்டங்களை நிர்வகித்து வருகின்றது. அதன் துணை நிறுவனங்களான Sior Verde Limited (ஐக்கிய இராச்சியம்), Sadaharitha Plantations Madagascar மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மூலோபாய கூட்டாண்மை ஆகியவற்றினூடாக, முக்கிய சர்வதேச சந்தைகள் மத்தியில் தனது இருப்பினை இந்நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. 

வனவியல் தொழிற்பாடுகளுக்குப் புறம்பாக, ஆடம்பர வாசனைத்தெளிப்பான் துறையிலும் வெற்றிகரமான வர்த்தக முயற்சிகளை சதாஹரித முன்னெடுத்து வருவதுடன், Sior Verde என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இலங்கையின் உயர்ரக oud வகை வாசனைத்தெளிப்பானைத் தயாரித்து வருவதுடன், இது தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் கிடைக்கப்பெறுகின்றது. 100% சேதன, ஆராய்ச்சியின் துணையுடனான வல்லப்பட்டை நோய்த்தடுப்பு தொழில்நுட்பமான அதன் தனியுரிமை கொண்ட SP Tech என்பது பிசின் உருவாக்கத்தை விரைவுபடுத்தும் அதேசமயம், நெறிமுறைக்குட்பட்ட, நீடித்து நிலைக்கின்ற உற்பத்தியை உறுதி செய்தவாறு, தொழிற்துறையின் தராதரங்களை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது. 

நிறுவனத்தின் பயணம் குறித்து சதாஹரித குழும நிறுவனங்களின் தலைவர் திரு. சதீஸ் நவரத்ன அவர்கள் கருத்து வெளியிடுகையில், 

“இந்த 23 ஆண்டு நிறைவு என்பது வெறுமனே இத்தனை ஆண்டுகள் என்பது மாத்திரமல்ல - இது நெகிழ்திறன், புத்தாக்கம், மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் கொண்டாட்டம். 1.05 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய சொத்துக்களைக் கடந்துள்ளமை எமது நோக்கத்தின் வலிமை, எமது முதலீட்டாளர்களின் விசுவாசம், மற்றும் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்றது. மிகவும் போற்றத்தக்க இப்பயணத்தில் எம்முடன் தோளோடு தோள் நின்ற அனைவருக்கும் எனது ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார். 

சதாஹரித தற்போது 24 வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்ற தருணத்தில், மக்களுக்கும், பூமிக்கும் சூழல்நேயமான, வலுவான, மற்றும் இன்னும் சுபீட்சமான எதிர்காலத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற தனது ஸ்தாபக நோக்கத்தில் அது தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. மதிப்பை வழங்குவதில் நிரூபிக்கப்பட்ட வரலாற்றுடன், தனது உலகளாவிய அடிச்சுவட்டை மேலும் விரிவுபடுத்தி, புதிய முதலீட்டு வாய்ப்புக்களை ஆரம்பித்து, மற்றும் இலங்கையின் நிலைபேணத்தக்க வனவியல் துறையை எதிர்காலத்திற்குள் சிறப்பாக முன்னின்று வழிநடாத்திச் செல்வதற்கு இந்நிறுவனம் சிறப்பான ஸ்தானத்தில் நிலைபெற்றுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05