வணிகம்
2025 பிராண்ட் ஃபினான்ஸ் அறிக்கையிடலில் சியெட் இலங்கையின் மிகவும் கௌரவமிக்க டயர் வர்த்தகநாமமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது

Aug 14, 2025 - 01:41 PM -

0

2025 பிராண்ட் ஃபினான்ஸ் அறிக்கையிடலில் சியெட் இலங்கையின் மிகவும் கௌரவமிக்க டயர் வர்த்தகநாமமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் அதிகம் விற்பனையாகும் நியூமேடிக் டயர் வர்த்தகநாமமான சியெட்டானது (CEAT) 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையில் மிகவும் கௌரவமிக்க டயர் வர்த்தகநாம தரவரிசையில் இடம்பிடித்ததன் மூலம் நாட்டின் வாகனத் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

உலகின் முன்னணி வர்த்தகநாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபினான்ஸ் (Brand Finance) அறிக்கையின்படி, சியெட் ஆனது அதன் வர்த்தகநாம பெறுமதியை 15% அதிகரித்து ரூ.2.325 பில்லியனாக அதிகரித்துள்ளதன் மூலம் இலங்கையின் 100 மிகவும் கௌரவமிக்க வர்த்தகநாமங்களில் ஒட்டுமொத்தமாக 44 வது இடத்தைப் பிடித்துள்ளது. 

குறிப்பிடத்தக்க வகையில், 83.3/100 என்ற அதன் வர்த்தகநாம உறுதி சுட்டெண் (BSI) மதிப்பெண்ணின் அடிப்படையில், சியெட் ஆனது நாட்டின் 6வது வலுவான நுகர்வோர் வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் AAA- வர்த்தகநாம உறுதி மதிப்பீட்டைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, இது நாட்டின் ஒரு சில உயர்மட்ட வர்த்தகநாமங்களால் மட்டுமே பகிரப்படுகிறது. 

உலகளாவியரீதியில், பிராண்ட் ஃபினான்ஸால் சியெட் எட்டாவது வலுவான டயர் வர்த்தகநாமமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் இந்த வர்த்தகநாமத்தின் செயல்திறன் தொடர்பாக கருத்து தெரிவித்த சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு. ரவி தத்லானி, இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாக தொடர்ந்து இருப்பதும், நாட்டின் முதல் பத்து வலுவான நுகர்வோர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக இருப்பதும், எமது தயாரிப்புகளின் தரம், எமது மூலோபாயத்தின் தெளிவு மற்றும் எமது செயல்பாட்டின் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். மேலும் இது சியெட்டின் நுகர்வோர் நம்பிக்கை, செயல்பாட்டு ஒழுக்கம் மற்றும் நிதியியல் அர்ப்பணிப்பு மற்றும் தரம் மற்றும் புத்தாக்கம் மீதான எமது இடைவிடாத கவனம் ஆகியவற்றின் வலிமையை பிரதிபலிக்கிறது, என்று கூறினார். 

சியெட்டானது ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனையாகும் நிலையில் உள்நாட்டு சந்தையில் பல பிரிவுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் அதே வேளை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முக்கிய சந்தைகள் உட்பட 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் உலகளாவிய தடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும் சியெட்டானது இலங்கையில் அதிக விருது பெற்ற டயர் வர்த்தகநாமமாகும். 

2025 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் டயர் உற்பத்தி நிறுவனமாக பட்டய தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தால் (CPM) தேர்ந்தெடுக்கப்பட்ட சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஆனது இந்தியாவின் RPG குழுமத்திற்கும் இலங்கையின் களனி டயர்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும். இந்த நிறுவனமானது இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் 50% யை உற்பத்தி செய்வதுடன் ரேடியல், டிரக், இலகுரக டிரக், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் விவசாய வாகன டயர் பிரிவுகளில் சந்தை தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் உற்பத்தியில் 20% ஐ தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது, மேலும் கடந்த தசாப்தத்தில் இலங்கையில் ரூ.8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05