Aug 14, 2025 - 04:58 PM -
0
இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் படகில் இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் பயணம் செய்த படகு பழுதாகி நின்றுள்ளது.
அவ்வழியாக வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் படகையும் இரண்டு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர பாதுக்காப்பு குழு பொலிஸார் கைது செய்து, இவர்கள் மீன்பிடிக்க வந்தார்களா? அல்லது கடத்தலுக்காக வந்தார்களா? என மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
--