விளையாட்டு
கிண்ணத்தை வென்றது எஸ்.எல்.சி கிரீன்ஸ்

Aug 16, 2025 - 05:36 PM -

0

கிண்ணத்தை வென்றது எஸ்.எல்.சி கிரீன்ஸ்

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நடத்திய எஸ்.எல்.சி இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் எஸ்.எல்.சி கிறேஸ் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி எஸ்.எல்.சி கிரீன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற எஸ்.எல்.சி கிறேஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய எஸ்.எல்.சி கிரீன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

துடுப்பாட்டத்தில் குஷல் மெண்டிஸ் அதிகபட்சமாக 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

இந்நிலையில் 190 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய எஸ்.எல்.சி கிறேஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

அந்த அணி சார்பில் நிரோஷன் டிக்வெல்ல மாத்திரமே 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இதன்மூலம் கமிந்து மெண்டிஸ் தலைமையிலான எஸ்.எல்.சி கிரீன்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05