Aug 17, 2025 - 10:05 AM -
0
அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித் நடிக்கும் 64வது படத்தையும் இயக்கப் போகிறார்.
இந்த தகவலை சம்பத்தில் அவரே உறுதிப்படுத்தி இருந்தார்.
அதையடுத்து இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம், நடிக்கப்போகும் நடிகைகள் குறித்த சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஒரு நிகழ்ச்சியில் அஜித் 64வது படம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதில், குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.
ஆனால் அஜித் 64 வது படம் அந்த படத்தில் இருந்து மாறுபட்டதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.
அஜித்தை ஒரு புதிய கோணத்தில் காண்பிக்க போகிறேன்.
என்றாலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் இதில் இருக்கும் என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்த படத்தை 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.