உலகம்
குழந்தைகள் மீதான போரை உடன் நிறுத்த வேண்டும்

Aug 17, 2025 - 01:18 PM -

0

குழந்தைகள் மீதான போரை உடன் நிறுத்த வேண்டும்

காசாவில் சிறுவர்கள் மீதான போரை நிறுத்த வேண்டிய தருணம் இதுவாகும் என ஐக்கிய நாடுகளின் பாலஸ்த்தீனிய அகதிகளுக்கான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

குழந்தைகள் காசாவில் பட்டினியால் இறப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மீண்டும் என அந்த அமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது. 

சுகாதார குழுக்களால் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் உடல் மெலிந்து, பலவீனமாக உள்ளதாகவும் அவர்களுக்கு அவசரமாக தேவையான சிகிச்சை கிடைக்காவிட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் பாலஸ்த்தீனிய அகதிகளுக்கான நிறுவனம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. 

புள்ளிவிபரத்தின் படி, 2023 ஆம் ஆண்டு முதல் காசாவில் 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து மற்றும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

எனவே குழந்தைகள் மீதான இந்தப் போரை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும் என்று ஐக்கிய நாடுகளின் பாலஸ்த்தீனிய அகதிகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05