உலகம்
இஸ்ரேலில் இடம்பெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பலர் கைது

Aug 17, 2025 - 04:32 PM -

0

இஸ்ரேலில் இடம்பெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பலர் கைது

காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்துமாறு கோரி, இஸ்ரேலில் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 11 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டெல் அவிவ் நகரில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகின்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அயலோன் அதிவேக வீதியையும் மறித்ததாக த டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி வௌியிட்டுள்ளது. 

அதனால் பல ஆபத்தான விபத்துக்களும் ஏற்படவிருந்த நிலையில் பற்றநிலை அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அதிவேக வீதியை மறித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதவிர குழப்பங்களை ஏற்படுத்தியதாக ஏனைய இருவரும் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்துமாறு கோரி, இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05