உலகம்
ரஷ்ய - உக்ரைன் போரில் உலக சாதனை படைத்த உக்ரேனிய வீரர்!

Aug 18, 2025 - 11:43 AM -

0

 ரஷ்ய - உக்ரைன் போரில் உலக சாதனை படைத்த உக்ரேனிய வீரர்!

ரஷ்யாவுடன் நடந்து வரும் போரில் உக்ரேனிய வீரர் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்துள்ளார். 

13,000 அடி (சுமார் 4 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்த 2 ரஷ்ய வீரர்களை Sniper துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொன்றார். இதை உக்ரைன் செய்தித்தாள் கீவ் போஸ்ட் தெரிவித்தது. 

இந்த சம்பவம் கடந்த ஓகஸ்ட் 14 அன்று போக்ரோவ்ஸ்க் பகுதியில் நடந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' Sniper துப்பாக்கியால் 2 ரஷ்ய வீரர்களைக் அவர் சுட்டுக் கொன்றுள்ளார். 

இதை வெற்றிகரமாகச் செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது. 12,400 அடி தூரத்தில் இருந்து ரஷ்ய வீரர் ஒருவரை அவர் சுட்டுக் கொன்றிருந்தார். தற்போது அந்த சாதனையை மற்றொரு உக்ரேனிய வீரர் முறியடித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05