Aug 19, 2025 - 11:49 AM -
0
NDB வங்கியானது இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வெளிநாட்டுக் கல்வியை நிதியியல் ரீதியாக அணுகக்கூடியதாகவும் மன அழுத்தமில்லாததாகவும் மாற்றும் நோக்கில், இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற கல்வி ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான இன்டர்நேஷனல் ஸ்கொலருடன் [International Scholar] தனது அண்மையபங்குடைமையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) ஜூலை 20, 2025 அன்று கொழும்பில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக கைச்சாத்திடப்பட்டது.
NDB வங்கியின் சார்பாக தனிப்பட்ட வங்கியியல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் திரு. சஞ்சய பெரேரா மற்றும் சில்லறை வங்கிப்பிரிவின் துணைத் தலைவர் திரு. ஸியான் ஹமீத் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இன்டர்நேஷனல் ஸ்கொலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. கீர்த்தி ஜெயசூர்ய மற்றும் பணிப்பாளர் மற்றும்பிரதம ஆலோசகரான திருமதி. ருக்மாலி ஜெயசூர்ய ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்டர்நேஷனல் ஸ்கொலரானது பல தசாப்தங்களாக சிறப்பான சாதனைப் பதிவுடன், சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில் முன்னோடியாக இருந்து வருகிறது, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு வாய்ப்பினை வழங்கி வருகிறது. கல்வி ஆலோசனை, விசா உதவி மற்றும் வருகைக்குப் பிந்தைய ஆதரவு ஆகியவற்றில் அவர்களின் நிபுணத்துவம், வெளிநாடுகளில் கல்வி கற்பதில் உள்ள சிக்கல்களை தீர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விருப்பமான பங்காளராக திகழ்கிறது.
NDB வங்கியானது இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, கல்விக் கடன்கள், மாணவர் கோப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்பும் சேவைகள் உள்ளிட்ட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்குவதுடன் குடும்பங்கள் தமது உலகளாவிய கல்விப் பயணங்களைத் திட்டமிடும்போது அவர்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான நிதியியல் அடித்தளத்தை வழங்குகிறது.
இந்த பங்குடைமை தொடர்பாகப் பேசிய திரு. சஞ்சய பெரேரா, “சர்வதேச ஸ்கொலருடன் கூட்டு சேர்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்து விளங்கும் தன்மை என்பன NDB இன் மதிப்புகளை நெருக்கமாக பிரதிபலிக்கின்றன. அவர்களின் ஆலோசனை நிபுணத்துவத்தைஎமது நிதி ஆதரவுடன் இணைப்பதன் மூலம், இலங்கை மாணவர்கள் தமது சர்வதேச கல்வி முயற்சிகளில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்க உதவும் ஒரு விரிவான தளத்தை உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த பங்குடைமையானது , ஒரு வங்கியை விட அதிகமாக, வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கற்களை செயல்படுத்தும் NDB இன் பயணத்தில் மற்றொரு படியாகும். NDB வங்கியானது வலுவான நிதியியல் தீர்வுகள் மூலம் கல்வி அபிலாஷைகளை ஆதரிப்பதன் ஊடாக, தேசத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.