வணிகம்
முதற்தர ‘S-I-S’ சில்லறை விற்பனை அனுபவத்தை களனி மற்றும் ஹொரணைக்கு விரிவுப்படுத்தும் சியெட்

Aug 19, 2025 - 11:59 AM -

0

முதற்தர ‘S-I-S’ சில்லறை விற்பனை அனுபவத்தை களனி மற்றும் ஹொரணைக்கு விரிவுப்படுத்தும் சியெட்

இலங்கையின் முன்னணி டயர் வர்த்தகநாமமான சியெட் (CEAT) களனி மற்றும் ஹொரணை ஆகிய இடங்களில் தனது புதிய கொள்கைக்கிணங்க Shop-in-Shop (SIS) விற்பனை நிலையங்களைத் திறந்ததன் மூலம் அதன் சில்லறை விற்பனை அனுபவத்தை விரிவுப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் சியெட்டின் 11ஆவது மற்றும் 12ஆவது சியெட் SIS விற்பனை நிலையங்கள், களனியில் கண்டி வீதியில், இலக்கம் 408 ஜெயந்த டயர் டிரேடர்ஸிலும், ஹொரணையில் பாணந்துறை - அங்குருவத்தொட்ட வீதியில் (Balancing & Alignment), இலக்கம் 243 இல் உள்ள லால் டயர் ஹவுஸிலும் அமைந்துள்ளன. இப்புதிய விற்பனை நிலையங்கள் இந்தப் பகுதிகளில் வாகன உரிமையாளர்களுக்கு பிரத்தியேக மற்றும் முதற்தர கொள்வனவு அனுபவத்தை வழங்கவுள்ளன. 

இந்த விற்பனை நிலையங்கள் கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள், டயர் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் கூடிய விரிவான சியெட் டயர்களை வழங்கவுள்ளதுடன் அத்துடன் வீல்களுக்கான சமநிலை மற்றும் சீரமைப்பு, டயர் வீக்கத்திற்கான நைட்ரஜன் மற்றும் காற்று பம்புகள், அலாய் வீல்கள் மற்றும் வாகன பேட்டரிகள் போன்ற சேவைகளை வழங்கவுள்ளன. ஒவ்வொரு சியெட் SIS விற்பனை நிலையத்தினதும் தனித்துவமான அம்சம் என்னவெனில் அதன் சொந்த வாடிக்கையாளர் ஓய்வறை ஆகும். 

இந்த உயர்ரக சில்லறை விற்பனை நிலையங்கள் பயணிகள் கார்கள் மற்றும் SUV களுக்கான டயர் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட ரேடியல் டயர்களை உற்பத்தி செய்கிறது. 

சியெட் களனி நிறுவனம் தற்போது வருடாந்தம் 150,000 க்கும் மேற்பட்ட அசல் உபகரண (OE) டயர்களை உள் நாட்டு வாகன உதிரிப்பாகங்கள் பொருத்தல் துறைக்கு வழங்கி வருகிறது. இது இலங்கையில் பொருத்தப்படும் வாகனங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உள்ளடக்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் சியெட் டயர்கள் தற்போது 30 க்கும் மேற்பட்ட வாகன மாதிரிகளான SUVகள், கார்கள், பேருந்துகள், லாரிகள், பிக்-அப் டிரக்குகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றில் அசல் உபகரணங்களாக உள்ளன. இலங்கையில் பொருத்தப்படும் 11 வர்த்தக நாம வாகனங்களில் இவை உள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05