வணிகம்
இலங்கையின் ப்ரீமியர் ஹொக்கி லீக்கின் அதிரடியான 2 சீசன் எதிர்வரும் நவம்பர் ஆரம்பம்

Aug 19, 2025 - 01:03 PM -

0

இலங்கையின் ப்ரீமியர் ஹொக்கி லீக்கின் அதிரடியான 2 சீசன் எதிர்வரும் நவம்பர் ஆரம்பம்

இலங்கை ப்ரீமியர் ஹொக்கி லீக் (Premier Hockey League) இன் இரண்டாவது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளதுடன், இலங்கையின் விளையாட்டுத்துறை நாட்காட்டியில் மதிப்புமிக்க ஹொக்கி நிகழ்வாகவும் இது அமையவுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பிலான உத்தியோகபூர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி மாத இறுதி வரை நீடிக்கும் ஒரு அதிரடியான போட்டித் தொடருக்கான முன்னறிவிப்பாகவும் இது அமைந்தது. 

இலங்கை ஹொக்கி சம்மேளனம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஆதரவுடன் நெக்ஸ்ட்ஜென் ஹொக்கி அபிவிருத்தி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான போட்டித் தொடரில் போட்டியிடும் ஒன்பது வலிமையான அணிகளில் பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை, பி.ஆர்.சி, பழைய சேனநாயக்கன்ஸ் விளையாட்டுக் கழகம் (DS), சி.ஆர், டி.எஸ் மற்றும் ரோயல் கல்லூரி ஹொக்கி கிளப் ஆகியவை அடங்குகின்றன. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய அணிகளைச் சேர்ந்த முக்கிய சர்வதேச வீரர்கள் பங்கேற்ற வெற்றிகரமான முதல் சீசனுக்குப் பின்னர், சீசன் 2 இல் மேலும் பல திறமையான சர்வதேச வீரர்கள் இணையவுள்ளனர். அவர்களின் மாறுபட்ட திறன்கள் மற்றும் உலகளாவிய அனுபவம் போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்குமென்பதுடன், நாடு தழுவிய ஹொக்கி ரசிகர்களுக்கு அற்புதமான தருணங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விளையாட்டின் உற்சாகத்தை பரந்தளவிலான பார்வையாளர்களிடம் கொண்டு செல்லவும், இரு நகரங்களிலும் உள்ள ஆர்வம் மிகுந்த ரசிகர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும், போட்டித் தொடரானது கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய துடிப்பான இரு ஹொக்கி மையங்களில் நடைபெறவுள்ளது. 

வளர்ந்து வரும் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களை மேம்படுத்த ஒரு அபிவிருத்திக் குழுவை அறிமுகப்படுத்துவதன் மூலம், PHL சீசன் 2 இலங்கை ஹொக்கியை போட்டிக்கும் அப்பால் முன்னேற்ற முயல்கிறது. இந்த முயற்சியின் குறிக்கோள், நாட்டில் விளையாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதும், சர்வதேச போட்டிக்கு இளம் விளையாட்டு வீரர்களை தயார்படுத்துவதும் ஆகும். 

முதல் சீசனில் தாம் பெற்ற மகத்தான ஆதரவிற்காக அனுசரணையாளர்கள், ஊடக நண்பர்கள், முன்னைய வீரர்கள் மற்றும் பரந்த ஹொக்கி சமூகத்திற்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர். 

இது தொடர்பில் நெக்ஸ்ட்ஜென் ஹொக்கி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், "உயர் தரத்திலான ஹொக்கியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், வரவிருக்கும் தலைமுறை வீரர்களுக்கான நியமங்களை நிர்ணயிக்கும் ஒரு தளமான ப்ரீமியர் ஹொக்கி லீக், சீசன் 2 ஐ தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. விரிவாக்கப்பட்ட அணி வரிசை, உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் மற்றும் எங்கள் பங்காளர்களின் அசைக்க முடியாத ஆதரவு ஆகியவற்றால் இந்த சீசன் அற்புதமானதாகத் தெரிகிறது.”என்றார். 

ப்ரீமியர் ஹொக்கி லீக், மேன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் விளையாட்டு உணர்வை வளர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது, ஒவ்வொரு போட்டியும் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை வழங்குவதை உறுதி செய்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05